/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு கரையில் சிறுவன் உடல் மீட்பு
/
அடையாறு கரையில் சிறுவன் உடல் மீட்பு
ADDED : ஆக 02, 2024 12:20 AM
குமரன் நகர்,எம்.ஜி.ஆர்., நகர் நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சஞ்சய், 17. இவர் மீது கே.கே., நகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.
இந்நிலையில், ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர் அருகே உள்ள அடையாறு ஆற்றங்கரையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த உடலை மீட்டு, குமரன் நகர் போலீசார் விசாரித்த போது, அது சஞ்சய் என்பது தெரியவந்தது. சடலம் அருகே கரையோர பகுதியில் அரிவாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளார். அதன் பிறகு இறந்து கிடந்துள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.
நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.