/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலும்புக் கூடான மூடி மாற்றம் வாகன ஓட்டிகள் நிம்மதி
/
எலும்புக் கூடான மூடி மாற்றம் வாகன ஓட்டிகள் நிம்மதி
எலும்புக் கூடான மூடி மாற்றம் வாகன ஓட்டிகள் நிம்மதி
எலும்புக் கூடான மூடி மாற்றம் வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூலை 03, 2024 12:28 AM

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில் இருந்து, செம்மஞ்சேரி செல்லும் சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. சில மாதங்களாக, மெட்ரோ ரயில் பணிக்காக, இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன.
இந்த சாலையில் திரும்பும் இடத்தில், மழைநீர் வடிகால் உள்ளது. அதில் உள்ள மூடி, பாரம் தாங்காமல் சிதைந்து எலும்புக்கூடாக இருந்தது. இரவில் பாதசாரிகள் தடுக்கி விழுந்தனர்.
பைக், சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், உள்வாங்கிய பள்ளத்தில் நிலைதடுமாறின. மூடி சேதமடைந்து 10 நாட்கள் ஆகியும் மாற்றவில்லை.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலை மேம்பாட்டு துறை சார்பில், மூடி இருந்த இடத்தை பலப்படுத்தி, புதிய மூடி போடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நிம்மதி அடைந்தனர்.