/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்துச்சண்டை அரங்க பணி: கோபாலபுரத்தில் துவக்கம்
/
குத்துச்சண்டை அரங்க பணி: கோபாலபுரத்தில் துவக்கம்
ADDED : மே 15, 2024 12:24 AM

தேனாம்பேட்டை,
கோபாலபுரம் மைதானம், இளைஞர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இங்கு வரும் இளைஞர்கள், கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவர். ஒரு பக்கம் குத்துச்சண்டை பயிற்சியும் நடந்தது.
ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் பலர், நடைபயிற்சியும் மேற்கொண்டு வந்தனர். மேலும், கார்கள் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கோபாலபுரம் மைதானம், இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
இதையடுத்து, இம்மைதானம் ஒரு பகுதியில் 7.78 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணியை துவங்கியுள்ளது. 15 மாதங்களுக்கு இந்த பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், கிரிக்கெட் விளையாடுவதற்கும் ஏதுவாக, மைதானத்தின் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

