/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரோட்டா சாப்பிட்டசிறுவன்உயிரிழப்பு
/
பரோட்டா சாப்பிட்டசிறுவன்உயிரிழப்பு
ADDED : மார் 01, 2025 01:18 AM

திருமுல்லைவாயல், திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 41; கொத்தனார். இவரது மனைவி சங்கீதா, 36. தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர்களது மகன் சுதர்ஷனன், 11. அம்பத்துாரில் உள்ள தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி இரவு, வீட்டின் அருகில் உள்ள ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக வயிற்று வலியால் துடித்த சிறுவனை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடல்நிலை சீராகாததால், நேற்று முன்தினம் காலை, ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு, சிறுவன் மயங்கியுள்ளான்.
பெற்றோர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, சிறுவன் உயிரிழந்தான்.
திருமுல்லைவாயல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.