/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவு சோதனையில் எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
/
நள்ளிரவு சோதனையில் எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
நள்ளிரவு சோதனையில் எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
நள்ளிரவு சோதனையில் எப்.ஓ.பி., வீசிய லத்தியால் சிறுவன் படுகாயம்
ADDED : மே 24, 2024 12:14 AM
பெரம்பூர், பெரம்பூர் முரசொலி மேம்பாலம் பகுதியில், பெரம்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனுஜன், எப்.ஓ.பி., எனும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சந்தோஷ் என்பவருடன், நேற்று அதிகாலை 2:30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த சிறுவர்களை, சோதனைக்காக நிறுத்த சொல்லி உள்ளனர். அவர்கள், நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது, சந்தோஷ் லத்தியை எடுத்து வீசியதில் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
விசாரணையில், புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஷாயின்ஷா என்பவரின் மகன்கள் என்பது தெரிய வந்தது. அவரது மூத்த மகன் 10ம் வகுப்பும், இளைய மகன் 8ம் வகுப்பும் படிக்கிறார்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், தேநீர் மற்றும் மாத்திரை வாங்கி வர, நேற்று அதிகாலை ஸ்கூட்டரில் பெரம்பூர் முரசொலி மேம்பாலம் வழியே இருவரும் சென்றுள்ளனர். அப்போது இளைய மகன் மீது தான் சந்தோஷ் வீசிய லத்தி பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவன் வீடு திரும்பினார்.
சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரிடம் விசாரித்த போலீசார், அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தால் அவர்களை பிடித்து பெற்றோருக்கு தகவல் தர வேண்டும். மாறாக, அவர்களை எப்படி கண்மூடித்தனமாக அடிக்கலாம். பெரிய விபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்.
- சிறுவனின் பெற்றோர்