ADDED : ஜூன் 15, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வில்லிவாக்கம்: சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், 10 நாட்கள் நடந்த வைகாசி பிரம்மோத்சவ பெருவிழா நிறைவடைந்தது.
வில்லிவாக்கத்தில் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.
விழாவையொட்டி, தினமும் காலை – மாலை பல்வேறு வாகனங்கள் மற்றும் உற்சவங்களில் சுவாமி அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது.
நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை நடந்த புஷ்பயாகம் விழாவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புண்ணியகோடி விமானத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
