/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
ADDED : ஆக 07, 2024 01:00 AM

ராயபுரம்,திருவண்ணாமலை, வடமணப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏகசுந்தரம், 60. கடந்த மாதம் இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஆக., 3ம் தேதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஏகசுந்தரம், நேற்று மூளைசாவு அடைந்தார்.
யோகசுந்தரத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதன்படி, அவரது உடலில் இரண்டு சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டு, அரசு விதிமுறைகளின் படி பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த நோயாளியின் உடலுக்கு ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, ஸ்டான்லி மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ், நிலைய மருத்துவ அலுவலர் வனிதா மலர் மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர்.