/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசி' மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
/
'ஏசி' மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
ADDED : மே 23, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, படப்பையைச் சேர்ந்தவர் கோதண்டம், 55; கொத்தனார். நேற்று, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில், பணி செய்து கொண்டிருந்தார்.
முதல் தளத்தில் உள்ள கழிப்பறையில் பூச்சு வேலை செய்ய, ஏணி வழியாக ஏறினார். அப்போது, புதிதாக அமைக்கப்பட்ட 'ஏசி'யில் மின்கசிவு இருந்துள்ளது. அதில் கை வைத்தபோது, 10 அடி உயரத்தில் இருந்து துாக்கி கீழே வீசப்பட்டார்.
இதில், மூக்கில் ரத்தம் கசிந்து கோதண்டம் பலியானார். சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

