ADDED : மே 01, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலம்பாக்கம்,
பல்லாவரம் அடுத்த அனகாபுத்துார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராம்பாபு, 32; கொத்தனார்.
நேற்று முன்தினம், 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் இரவு 8:00 மணிக்கு மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கோவிலம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், ராம்பாபு துாக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து அதே இடத்திலே பலியானார்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ராம்பாபு உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வழக்கு பதிவு செய்து, தண்ணீர் லாரி ஓட்டுனர், திருவாரூர் மாவட்டம் வில்லியனுார் கொடவாசல் தாலுகா, குடியன் தெருவைச் சேர்ந்த பிரசன்னா, 21, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.