தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணப்பெண் ஒப்பனை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மணப்பெண் ஒப்பனை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மணப்பெண் ஒப்பனை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மார் 26, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைமணப்பெண் ஒப்பனை மூன்று நாள் பயிற்சி வகுப்பிற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்பு, இன்று முதல் நாளை மறுதினம் வரை, சென்னையில் நடக்க உள்ளது.

இப்பயிற்சியில் மேக்கப், மணப்பெண் ஒப்பனை, ஸ்கின் கேர், ப்ரைம் தி பேஸ், கலர் கரெக் ஷன், பவுண்டேஷனை பயன்படுத்துதல், துாள், புருவங்கள் மற்றும் கண் மேக்கப், சிகை அலங்காரம், சேலை கட்டும் விதங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் 18 வயதிற்கு மேற் பட்ட பெண்கள் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களை, www.editn.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, 86681 02600, 86681 00181, 70101 43022, 98413 36033 ஆகிய எண்களை, அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us