/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரிஜ் வெடித்து தீ விபத்து இருவர் மீட்பு
/
பிரிஜ் வெடித்து தீ விபத்து இருவர் மீட்பு
ADDED : ஜூன் 27, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளைமேடு,
சூளைமேடு, வீரபாண்டி நகர், இரண்டாவது தெருவில் மோகன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பிரிஜ் திடீரென வெடித்து, தீப்பிடித்தது. வீட்டில் இருந்த படுக்கை மற்றும் 'டிவி'க்கும் தீ பரவி, புகைமண்டலம் ஏற்பட்டது. அருகில் இருந்த வீடுகளுக்கும் புகை பரவியதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த விருகம்பாக்கம், கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி, வீட்டிற்குள் சிக்கியிருந்த அண்ணன், தங்கை இருவரை பத்திரமாக மீட்டனர்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.