ADDED : ஆக 28, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், நாகம்மை நகர் முதல் தெருவில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மெட்ரோ குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மேற்கூறிய சாலையில் குடிநீர் வீணாகி வருகிறது.
இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் பாய்ந்தோடி தேங்கும் தண்ணீரால் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.