/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கையை காதலித்தவரை வெட்டிய அண்ணன் கைது
/
தங்கையை காதலித்தவரை வெட்டிய அண்ணன் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:31 AM

கொடுங்கையூர், வியாசர்பாடி, சர்மா நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24; தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று, எருக்கஞ்சேரி, பவித்ரா மருத்துவமனை எதிரே நின்ற போது, அவ்வழியே வந்த எட்டு பேர் கும்பல், கத்தியால் வெட்டி விட்டு தப்பியது.
இதில் காயமடைந்த ரஞ்சித்குமாரை, அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
ரஞ்சித்குமார் தன் எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணை காதலித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் சங்கர் என்பவர், தன் கூட்டாளிகள் எட்டு பேருடன் சேர்ந்து கத்தியால் வெட்டியது தெரிந்தது.
இதையடுத்து சங்கரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.