/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதர்மண்டி நாசமாகும் நேர்மை நகர் சுடுகாடு
/
புதர்மண்டி நாசமாகும் நேர்மை நகர் சுடுகாடு
ADDED : ஜூன் 11, 2024 12:35 AM

கொளத்துார், திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்துார் 64வது வார்டு நேர்மை நகரில், மாநகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. இதை சுற்றிலும் பழைய இடுகாடு, அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.
போதிய பராமரிப்பின்றி இடுகாட்டை சுற்றிலும் புதர்மண்டி குப்பை சூழ்ந்துள்ளது. இப்பகுதி இரவு நேரங்களில் மதுக்கூடமாகவும் மாறி விடுகிறது.
மேலும் பழைய சுடுகாட்டின் தகன மேடைகள் முழுதும் அகற்றப்படாமல் உள்ளது. சுடுகாட்டு எதிரிலேயே கொளத்துார் சோமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடமும் புதர்மண்டி கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது.
இதுகுறித்து பகுதி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், 'அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் அருகிலேயே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது.
'இந்த இரண்டு இடத்தையும் சேர்த்து, கொளத்துார் காவல் நிலையம் மற்றும் தாசில்தார் அலுவலகம் கட்டடப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்கும். நவீன எரிவாயு தகன மேடையிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது' என்றனர்.

