/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'
/
மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'
மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'
மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு 'சீல்'
ADDED : மார் 04, 2025 12:10 AM

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு -188க்கு உட்பட்ட மடிப்பாக்கம், ராம்நகர் வடக்கு விரிவாக்கம், 8வது தெருவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புக்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
மேற்படி குடியிருப்பு, 'அம்மன் கன்ஸ்ட்ரக்சன்'எனும் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்நிறுவனத்திற்கு, ஆறு குடியிருப்புகள் கொண்ட கட்டடம், 426 ச.மீட்டரில் கட்ட, மாநகராட்சியால் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட நிறுவனம், 465 ச.மீட்டரில் கட்டடம் கட்டியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து, 30 நாட்களுக்குள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கட்டப்பட்ட கட்டடப் பகுதியை இடிக்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, நான்கு முறை, மாநகராட்சியின் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் அதை கண்டுகொள்ளவில்லை.
எனவே, நேற்று காலை, மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி, உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் மற்றும் வார்டு உதவிப் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில், பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்புடன், ஆறு குடியிருப்புகளில், ஐந்து குடியிருப்புகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
விடுபட்ட குடியிருப்பில், உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருவதால், அவருக்கு குடியிருப்பில் இருந்து வெளியேற, ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.