ADDED : செப் 08, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாலப்பாக்கம், சித்தாலப்பாக்கம், டி.வி.நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த், 33. இவர், நேற்று முன்தினம் வீட்டின் கீழ் தளத்திலும், குடும்பத்தினர் முதல் தளத்திலும் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் வீட்டின் முன்பக்கக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறைக்குள் நுழைந்து பீரோவை திறந்து, 1,000 ரூபாய் திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். சத்தம் கேட்டு கண்விழித்த ஆனந்த், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றார். அதில், ஒருவர் தப்பினார். மற்றொருவர் சிக்கினார்.
பெரும்பாக்கம் போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சீனிவாசன், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.