/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு
/
பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு
ADDED : மே 01, 2024 12:45 AM
காசிமேடு, காசிமேடு, சி.ஜி.காலனியை சேர்ந்தவர் செல்வகுமார், 42. இவர் வீட்டின் கீழ் தளத்தில், பேக்கரி நடத்தி வருகிறார். மேல் தளத்தில் வசித்து வந்தார்.
கடந்த அக்டோபரில், சொந்த ஊரான திருச்செந்துாருக்கு, செல்வகுமார் குடும்பத்துடன் சென்று திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.
போலீசில் புகார் அளித்தால், பேக்கரியில் வேலை செய்யும் ஊழியர்களை விசாரிப்பர்.
அவர்கள் மீண்டும் வேலைக்கு வர மாட்டர்கள் என்றும், தொழில் பாதிக்கும் என்பதாலும் செல்வகுமார் புகார் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில், ஊழியர் சாம்சன், 42 என்பவர் சந்தேகம் படும்படியாக நுழைந்ததால், காசிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.