/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பலி வாங்க காத்திருக்கும் புதை மின் கேபிள்கள்
/
பலி வாங்க காத்திருக்கும் புதை மின் கேபிள்கள்
ADDED : ஏப் 24, 2024 12:36 AM

திரு.வி.க.நகர்,
திரு.வி.க. மண்டலத்திற்கு உட்பட்ட 71வது வார்டு மேட்டுப்பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில், வீடுகளுக்கு செல்லும் புதை மின் கேபிள்கள், சாலையின் நடுவே செல்கிறது.
இப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 தெருக்களிலும் இதுபோன்ற நிலை தொடர்கிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தீ விபத்துகளுக்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதால், இதில் மின் வாரியம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு செல்லும் மின்சார கேபிள்கள், பல இடங்களில் சரிவர மண்ணில் புதைக்கப்படாமல் உள்ளன. எனவே, உயர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

