ADDED : மே 19, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நித்யானந்தம், 43; பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி ரேகா, 38. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.
இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி அளவில், ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, அண்ணனுார் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடிக்கு காலியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

