ADDED : செப் 03, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, அம்பத்துாரைச் சேர்ந்தவர் சண்முகவேல், 52. இவர், புதுார் - வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் '48பி' மாநகர பேருந்து ஓட்டுனராக உள்ளார். கடந்த 30ம் தேதி இரவு 9:00 மணியளவில், அம்பேத்கர் கல்லுாரி சாலையில் வந்த போது, மதுபோதையில் இருந்த சிலர், பேருந்தின் இடப்புற பக்கவாட்டு கண்ணாடியை, கல்லால் அடித்து உடைத்துவிட்டு மாயமாகினர்.
இதுகுறித்து, பேசின்பாலம் காவல் நிலையத்தில், சண்முகவேல் புகார் அளித்தார்.
விசாரணையில் புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சாமுவேல்,18, என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தின் மீது கல் வீசியது தெரிந்தது. சாமுவேலை கைது செய்த போலீசார், அவரது நண்பர்களான மரியன்பு, அமல்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.