/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்
/
பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்
ADDED : ஜூலை 14, 2024 12:27 AM
தாம்பரம், மேற்கு தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரிக்கு தடம் எண்: 51 என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல், தாம்பரத்தில் இருந்து பயணியருடன் பேருந்து புறப்பட்டது. பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டினார். சேலையூர் நிறுத்தத்தில் நின்று புறப்பட்டபோது, சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தனர்.
ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை கீழே இறங்குமாறு கண்டித்துள்ளார். பின், பேருந்து புறப்பட்டு சிறிது துாரம் சென்றதும், அம்மாணவர்கள் கற்களை எடுத்து பேருந்தின் பின்புறம் கண்ணாடி மீது வீசினர். இதில், கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.