/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிராபிக் போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
/
டிராபிக் போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
டிராபிக் போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
டிராபிக் போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : மார் 15, 2025 12:34 AM
சென்னை,கோடை காலம் என்பதால், ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களுக்கு, போக்குவரத்து போலீசாரின் தாகத்தை தணிக்கும் வகையில்,
தினசரி இரண்டு நேரம் மோர் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று, போர் நினைவுச் சின்னம் அருகே துவக்கி வைத்தார்.
அப்போது, கமிஷனர் அருண் பேசுகையில், ''ஆவின் மோர் பாக்கெட் ஒன்று, 6.33 ரூபாய். தினமும், 4,864 மோர் பாக்கெட், 30,789 ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது. இதன்படி, 120 நாட்களுக்கு, 37 லட்சத்து, 56,273 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாருக்கு காலை, மாலை என, இருவேளையும் மோர் வழங்கப்படும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.