/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி பாஸ்போர்ட் கோல்கட்டா வாலிபர் கைது
/
போலி பாஸ்போர்ட் கோல்கட்டா வாலிபர் கைது
ADDED : மே 28, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையிலிருந்து, கோலாலம்பூர் செல்லும் பயணியர் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது.
இதில் பயணிக்க வந்தவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து, அனுமதித்து வந்தனர். அப்போது கோல்கட்டாவைச் சேர்ந்த பிளாஸ் டாலி, 31, என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, போலி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை குடியுரிமை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிளாஸ் டாலியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.