/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு
/
மாநகராட்சி தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : மே 24, 2024 12:08 AM
சென்னை, சென்னை, ராயப்பேட்டையில், மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.
இங்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., சான்றிதழுடன், தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர்கள், ஊழியர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியுடைய மாணவர்களுக்கு மாதம் 10,500 ரூபாய் வரை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், இரண்டு ஜோடி சீருடை, பஸ் பாஸ், பாடப்புத்தகம், வரைபட கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் தேநீர், பிஸ்கட், மதிய உணவு மற்றும் மாதந்தோறும், 750 ரூபாய் பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தை, http://www.chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் இலவசமாக பெறலாம்.
இதற்கான மாணவர் சேர்க்கை, ஜூன் 1ம் தேதி முதல் ஆக., 31ம் தேதி வரை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 044 - 2847 3117; 2951 5312; 70104 57571; 79049 35430 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.