/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு
/
செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 07, 2024 12:41 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அணியில் விளையாட, 19 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும்.
இதில் 19 வயதுக்கு உட்பட்டோர், 2005 செப்., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்களும், 16 வயதில் 2008 செப்., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்களும் தான், பங்கேற்க முடியும்.
தேர்வு முகாம், நாளை மறுநாளும், செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமம், கபிலன் விளையாட்டு பூங்காவில் காலை 6:00 மணிக்கு நடக்கிறது.
பங்கேற்ற விரும்புவோர் நேரடியாக மைதானத்தில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 73388 05588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

