/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேரி கார்டில் சோலாருடன் கேமரா போக்குவரத்து போலீசார் புதுமை
/
பேரி கார்டில் சோலாருடன் கேமரா போக்குவரத்து போலீசார் புதுமை
பேரி கார்டில் சோலாருடன் கேமரா போக்குவரத்து போலீசார் புதுமை
பேரி கார்டில் சோலாருடன் கேமரா போக்குவரத்து போலீசார் புதுமை
ADDED : மே 30, 2024 12:13 AM

வேப்பேரி,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் முக்கிய சாலை சந்திப்புகளில் திடீரென சிக்னல்கள் பழுதடைந்தால், மாற்றாக சூரிய மின் சக்தியால் இயங்கும் சிக்னல்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சூரிய மின் சக்தியால் இயங்கும் நவீன கண்காணிப்பு கேமராவை போலீசார், 'பேரி கார்டு' எனும் இரும்பு தடுப்பிலேயே பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதற்கட்டமாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பயன்படுத்த உள்ளனர். தற்போது சூரிய மின் சக்தியால் இயங்கும் கண்காணிப்பு கேமரா வாயிலாக, அனைத்து விதமான சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் 'நம்பர் பிளேட்' துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை. இதனால் சாலை விதிமீறலில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடிவிற்கு பின் அமலில் கொண்டு வரப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.