/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோய் பரப்பும் கொசுப்புழு ஒழிக்க நீர்நிலைகளில் 'கம்பூசியா' மீன்கள்
/
நோய் பரப்பும் கொசுப்புழு ஒழிக்க நீர்நிலைகளில் 'கம்பூசியா' மீன்கள்
நோய் பரப்பும் கொசுப்புழு ஒழிக்க நீர்நிலைகளில் 'கம்பூசியா' மீன்கள்
நோய் பரப்பும் கொசுப்புழு ஒழிக்க நீர்நிலைகளில் 'கம்பூசியா' மீன்கள்
ADDED : மே 01, 2024 12:31 AM

வேளச்சேரி, அடையார் மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இங்குள்ள, வேளச்சேரி, திருவான்மியூர், தரமணி, அடையாறு, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதியில், 2,000த்துக்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. மேலும், வேளச்சேரியில் ஏரி மற்றும் ஐந்து குளங்கள் உள்ளன.
இவற்றில் உற்பத்தியாகும்கொசு புழுக்களை ஒழிக்க, 'கம்பூசியா' மீன் குஞ்சுகளை நீர்நிலைகளில் விடப்படுவது வழக்கம். இம்மீன்கள், நீர்நிலைகளில் உள்ள கொசு புழுக்களை சாப்பிட்டு, நீரை சுத்தம் செய்யும்.
ஏற்கனவே விடப்பட்ட இவ்வகை மீன்கள், கோடையில் கிணறுகளில் நீர் குறைந்து வருவதால், இறந்துவிடும் நிலை உள்ளது. இதனால் புதிதாக, 'கம்பூசியா' மீன் குஞ்சுகள் விடும் பணியை சுகாதாரத் துறை துவங்கியுள்ளது.
ஒரு கிணற்றில், 25 முதல் 30 வரை மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மேலும், குளங்கள் மற்றும் காலி இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன.
இதனால், டெங்கு உள்ளிட்ட நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி தடுக்கப்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.