/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாய்ந்த மின்மாற்றி சீரமைக்கப்படுமா?
/
சாய்ந்த மின்மாற்றி சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 16, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம் மண்டலம் தி.நகரில், பர்கிட் சாலை உள்ளது. தி.நகரில் மேம்பால பணி மற்றும் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால், இச்சாலை வழியாக வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பர்கிட் சாலை பேருந்து நிறுத்தம் அருகே, நடைபாதையில் மின்மாற்றி அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டது. சமீபத்தில், இந்த மின்மாற்றி சாய்ந்துள்ளது. இதையடுத்து, நுாதன முறையில் மின்மாற்றியை கயிறால் கட்டி, நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, சாய்ந்த நிலையிலுள்ள மின்மாற்றியை முறையாக சீரமைக்க வேண்டும்.
- பி.சரவணன்
சமூக ஆர்வலர், தி.நகர்.

