/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய்; ஊராட்சி நிர்வாகம் 'புத்திசாலித்தனம்'

ADDED : செப் 07, 2024 01:53 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ருட்டி ஊராட்சியில் உள்ள தனபால் தெருவில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் வழிந்தோடியது.
இதையடுத்து, தனபால் தெருவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால், கால்வாய் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாயின் நடுவே இரண்டு மின்கம்பங்கள் உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக வெளியேற வழியில்லாமல் கால்வாயில் தேங்கும் சூழல் உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தின் மெத்தனத்தால், மக்களின் வரிப்பணம் வீணாகுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊராட்சி நிர்வாக அதிகாரி கூறுகையில், 'மழைநீர் கால்வாய் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின் வாரியத்துறை அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மின் கம்பம் மாற்றி அமைக்கப்படும்' என்றார்.