/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் சிறையில் கஞ்சா, போன் பறிமுதல்
/
புழல் சிறையில் கஞ்சா, போன் பறிமுதல்
ADDED : மார் 02, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சென்னை, புழல் சிறையில் நேற்று முன்தினம், விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் சுவர் இடையில் பொட்டலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 100 கிராம் கஞ்சா, பீடி, சிகரெட், லைட்டர் மற்றும் மொபைல்போன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அதே போல தண்டனை சிறையில் சுவர் இடுக்கில் மறைத்து வைத்திருந்த மொபைல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.