/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாபர்கான்பேட்டையில் ரூ.36 லட்சத்தில் கேரம் மையம்
/
ஜாபர்கான்பேட்டையில் ரூ.36 லட்சத்தில் கேரம் மையம்
ADDED : செப் 09, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாபர்கான்பேட்டை:கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான்பேட்டையில் கேரம் விளையாடுவோர் அதிகம் உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவு போட்டிகளில் பங்கேற்ற வீரர்களும் உள்ளனர்.
இவர்கள், 139வது வார்டு, ஜாபர்கான்பேட்டை ஆர்.ஆர்., காலனியில் மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் கேரம் விளையாடி வந்த நிலையில், கேரம் விளையாட தனி மையம் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி மேயர் நிதி, 36 லட்சம் ரூபாயில் ஆர்.ஆர்., காலனியில், 565 சதுர அடி பரப்பில் கேரம் மையம் கட்டும் பணி துவங்கி, நடந்து வருகிறது.