/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமித்த கார்கள் 'கால் கட்டு' போட்ட போலீசார்
/
நடைபாதை ஆக்கிரமித்த கார்கள் 'கால் கட்டு' போட்ட போலீசார்
நடைபாதை ஆக்கிரமித்த கார்கள் 'கால் கட்டு' போட்ட போலீசார்
நடைபாதை ஆக்கிரமித்த கார்கள் 'கால் கட்டு' போட்ட போலீசார்
ADDED : மே 05, 2024 12:13 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் தினசரி சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நடைபாதையை வாகன நிறுத்தமாக பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேற்று கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, 10க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் விபத்து அபாயத்தில் சென்று வந்தனர். இது குறித்த புகார்கள் வந்ததையடுத்து, ராயப்பேட்டை போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் நடைபாதையை வாகன நிறுத்தமாக பயன்படுத்திய, 10 கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, அப்பகுதிமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.