sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பா.ஜ., நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு

/

பா.ஜ., நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு

பா.ஜ., நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு

பா.ஜ., நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு


ADDED : ஏப் 29, 2024 01:11 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய சென்னை தொகுதியில், பா.ஜ., சார்பில் தலைமை தேர்தல் பணிமனை, அமைந்தகரையில் அமைக்கப்பட்டு இருந்தது.

மத்திய சென்னை மாவட்ட பா.ஜ., வர்த்தக பிரிவு செயலர் மூர்த்தி, வடக்கு மண்டல பா.ஜ., தலைவர் ராஜ்குமார் ஆகியோர் இடையே, தேர்தல் பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து இருவரும், 'வாட்ஸாப்' குழுவில் மாறி மாறி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம், அமைந்தகரையில் உள்ள பா.ஜ., தேர்தல் பணிமனைக்கு வந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் இருவரும், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், இருவரையும் விலக்கி விட்டனர்.

இதையடுத்து, இருவரும் தனித்தனியாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நேற்று தனித்தனியாக வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us