/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலையத்தில் ரகளை தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
/
விமான நிலையத்தில் ரகளை தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
விமான நிலையத்தில் ரகளை தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
விமான நிலையத்தில் ரகளை தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
ADDED : மே 13, 2024 01:39 AM
சென்னை:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேரணி நடத்திய, தே.மு.தி.க.,வினர் மீது, விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'பத்மபூஷண்' விருது வழங்கினார். அந்த விருதை பெற்ற, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நேற்று முன்தினம் மதியம், சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரை வரவேற்க, ஏராளமான தே.மு.தி.க.,வினர் குவிந்தனர். விருதுடன், விமான நிலையத்தில் இருந்து, கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., அலுவலகம் வரை, பேரணியாக புறப்பட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடவும், பேரணி நடத்தவும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுடன் போலீசார் வாக்குவாதம் செய்தனர். கார் மீது ஏறி அமர்ந்து, ரகளையிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, ஆலந்துார் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரியான தாசில்தார், சென்னை விமான நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உட்பட ஏழு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.