ADDED : ஜூன் 30, 2026 06:42 PM
சென்னை: மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சரத்குமார் வெளியிட்ட வீடியோவில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற காட்சிகள் இருந்ததாக தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க., மாணவரணி சார்பில், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையிலும், வேப்பேரி டவுட்டன் மேம்பாலத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையிலும் நடந்தது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட, 433 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். தொடர்ந்து தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு உட்பட, 433 பேர் மீது எழும்பூர், வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
–––––––––––––––––––––––
