/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு
/
காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு
ADDED : மே 19, 2024 12:23 AM
மாம்பலம்:சோழிங்கநல்லுார், குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜன், 69. இவர், வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர், சிங்கப்பூரில் காய்கறி வியாபாரம் செய்யும் மாதவன் என்பவருடன், 2010 - 2018ம் ஆண்டு வரை சிங்கப்பூருக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தார்.
ராஜன் ஏற்றுமதி செய்த காய்கறிகளுக்கான பணம், 69.38 லட்சம் ரூபாயை தராமல், மாதவன் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ராஜன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தற்போது இந்த வழக்கு, மாம்பலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

