/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்கின்சன் நோயாளிக்கு காவேரியில் அறுவை சிகிச்சை
/
பார்கின்சன் நோயாளிக்கு காவேரியில் அறுவை சிகிச்சை
ADDED : மே 04, 2024 12:32 AM

சென்னை,
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட, 55 வயது நபருக்கு, ஆழ்ந்த மூளைத்துாண்டுதல் அறுவை சிகிச்சை வாயிலாக, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் கூறியதாவது:
மூளையின் செல்களை செயலிழக்க செய்யும், நரம்பியல் மாற்றத்தால் ஏற்படும் பலவீனமே பார்கின்சன் நோய்.
சென்னையைச் சேர்ந்த 55 வயதான நபர், உடல் நடுக்கம் போன்ற பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நபருக்கு, ஆழ்ந்த மூளைத்துாண்டுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இந்த மருத்துவமனையில் முதல் முறையாக ஆழ்ந்த மூளைத்துாண்டுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.