/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கேமரா
/
குப்பை கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கேமரா
ADDED : மார் 11, 2025 07:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை மண்டல கவுன்சிலர்கள் கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மண்டல அதிகாரி சரவணன் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தண்டையார்பேட்டை பகுதியின் பொது இடங்களில் உள்ள பிரதான பிரச்னையான திடக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விதிமீறி குப்பை கழிவு கொட்டுவதை கண்காணிக்க, 7.50 லட்ச ரூபாய் செலவில், 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் உட்பட 56 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.