/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகதாடை முழு சீரமைப்புக்கான மையம் ராமச்சந்திராவில் திறப்பு
/
முகதாடை முழு சீரமைப்புக்கான மையம் ராமச்சந்திராவில் திறப்பு
முகதாடை முழு சீரமைப்புக்கான மையம் ராமச்சந்திராவில் திறப்பு
முகதாடை முழு சீரமைப்புக்கான மையம் ராமச்சந்திராவில் திறப்பு
ADDED : மார் 04, 2025 08:22 PM
சென்னை:போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முகதாடை முழு சீரமைப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கனடா நாட்டின் டிரான்ஸ் பார்மிங் க்ளெப்ட் அமைப்புடன் இணைந்து, 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு முழுமையான சிகிச்சை அளித்து வருகிறது.
இதற்கான, 20வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் உதடு, அன்னப்பிளவு முழு சீரமைப்பு சிறப்பு மையம், நேற்று துவங்கப்பட்டது.
இதுகுறித்து, வாக்ஸ்டமி அமைப்பினர் தலைவர் எஸ்.சரண்யா கூறியதாவது:
நான் உதடு அண்ணப்பிளவோடு பிறந்தேன். வசதி குறைவு காரணமாகவும், அப்போது நவீன வசதிகள் இல்லாத நிலையில், 15வது வயதில் தான், இச்சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள், பெற்றோர் கவனிப்பால் முழு திறன்களை பெற்றேன்.
இப்படிப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு, ஒரு அறுவைச் சிகிச்சை போதுமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு பல அறுவை சிகிச்சைகள் தேவைப்படும். மருத்துவ சிகிச்சையை நம்பி, முழு மனதோடு ஒத்துழைத்தால், பிற குழந்தைகள் போல் பேசி, கல்வி கற்று உயர்நிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.