/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன் அங்காடி டோக்கன் வினியோகம் நிறுத்தம்
/
மீன் அங்காடி டோக்கன் வினியோகம் நிறுத்தம்
ADDED : செப் 03, 2024 12:19 AM
சென்னை, மெரினா லுாப் சாலை நொச்சிக்குப்பத்தில், 14.93 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, கடந்த மாதம் 12ம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் நேற்று, மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், 125வது வார்டு கவுன்சிலர் ஆகியோர், கடைகள் யார் யார் பெயரில் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலைக் கூறி,'டோக்கன்' வழங்க முற்பட்டனர்.
பட்டியலை பார்த்த மீன் வியாபாரிகள் மற்றும் மீன் சுத்தம் செய்பவர்கள், யார் யாரோ பெயரில் கடைகள் ஒதுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் மீன் சுத்தம் செய்பவர்கள் கூடி, தகராறில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்துவந்த ராயப்பேட்டை போலீசார், வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, நொச்சிக்குப்பம் கோவில் திருவிழா முடிந்த பின், 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியலின்படி கடைகள் ஒதுக்கி தரப்படும் என, உறுதி அளித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.