/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியாரின் 36 நிலங்கள் வகைப்பாடு மாற்றம்
/
தனியாரின் 36 நிலங்கள் வகைப்பாடு மாற்றம்
ADDED : ஆக 04, 2024 12:28 AM
சென்னை, சென்னை பெருநகர் பகுதியில் நடக்கும், மேம்பாட்டு பணிகள் குறித்த முடிவுகள் எடுப்பதற்கான குழும கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். இந்த வகையில், 279வது குழும கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சி.எம்.டி.ஏ., தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் தொடர்பான, 70 கோப்புகள் மற்றும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பல்வேறு பகுதிகளில், தனியார் கோரிக்கை அடிப்படையில், 36 நில வகைப்பாடு மாற்றுவதற்கான கோப்புகள் தாக்கல் செய்யப்பட்டன.
தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை அடிப்படையில், இந்த கோப்புகளுக்கு குழும ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான பணிகளுக்கான பல்வேறு டெண்டர்களுக்கும், இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.