ADDED : ஏப் 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் பொதுவாக கட்டுமான பணியாளர்கள், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பணிபுரிவர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சோர்வு அதிகரித்து பணி பாதிக்கப்படுகிறது. இதனால், சில கட்டுமான நிறுவனங்கள், கோடை முடியும் வரை பணி நேரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
இதுகுறித்து வேளச்சேரியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் குமாரராஜா கூறியதாவது:
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பணியின் வேகம் குறைகிறது.
இதனால், ஜூன் 15ம் தேதி வரை, காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை என, பணி நேரத்தை மாற்றி உள்ளோம். இதனால், ஊழியர்கள் சோர்வில்லாமல் பணிபுரிவர். குறிப்பிட்ட நாளில் பணியை முடிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

