தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்

மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்

மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்


ADDED : ஏப் 19, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2024 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

லோக்சபா தேர்தல் காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும். காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் ஆறு நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும்.

இதுவே காலை 5:00 மணி முதல் காலை 8:00 மணி வரையிலும், காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் சர்வீஸ் இயக்கப்படும்.

இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us