தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில்கள் சேவையில் மாற்றம்

ரயில்கள் சேவையில் மாற்றம்

ரயில்கள் சேவையில் மாற்றம்


ADDED : மார் 27, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2024 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் ஆறு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொன்னேரி மற்றும் மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணிகள், நாளை முதல் 31ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் 11:45 மணி வரை நடக்க உள்ளது.

இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

 சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, 10:35 மணி ரயில்கள், மீஞ்சூர் வரை மட்டுமே மேற்கண்ட நாட்களில் இயக்கப்படும்

 கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி ரயில் எண்ணுார் வரை மட்டுமே இயக்கப்படும்

 கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்

 கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55 மணி ரயில், மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்

↓ சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில், எண்ணுாரில் இருந்து இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us