/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.ஒரு கோடி பரிசு
/
செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.ஒரு கோடி பரிசு
ADDED : மார் 04, 2025 12:16 AM

சென்னை, சிங்கப்பூரில் கடந்தாண்டு டிசம்பரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் ஆனார்.
இதன் வாயிலாக, இளம் வயதில் 'சாம்பியன்' பட்டத்தை பெற்றவர் என்ற பெயரை குகேஷ் பெற்றார். மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயின்று வரும் குகேஷுக்கு, முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது.
இதில், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேசிய கொடியை அசைத்து குகேஷை வரவேற்றனர். 250க்கும் மேற்பட்ட 'ட்ரோன்' கொண்டு, 'லேசர் ஷோ' நடந்தது.
இந்நிகழ்ச்சியில், குகேஷுக்கு, வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில், பள்ளி தாளாளர் வேல்மோகன், துணை தாளாளர் ஸ்ரீராம் வேல்மோகன் ஆகியோர், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.