/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இன்ஸ்டா'வில் வேறு நபரின் 'ரீல்ஸ்' பதிவேற்றி பெண்களுக்கு வலை விரித்த சிதம்பரம் வாலிபர் கைது
/
'இன்ஸ்டா'வில் வேறு நபரின் 'ரீல்ஸ்' பதிவேற்றி பெண்களுக்கு வலை விரித்த சிதம்பரம் வாலிபர் கைது
'இன்ஸ்டா'வில் வேறு நபரின் 'ரீல்ஸ்' பதிவேற்றி பெண்களுக்கு வலை விரித்த சிதம்பரம் வாலிபர் கைது
'இன்ஸ்டா'வில் வேறு நபரின் 'ரீல்ஸ்' பதிவேற்றி பெண்களுக்கு வலை விரித்த சிதம்பரம் வாலிபர் கைது
ADDED : மே 24, 2024 05:42 AM

பூக்கடை : சென்னையைச் சேர்ந்த இளம்பெண், 'இன்ஸ்டாகிராம்' வலைதள பக்கம் வாயிலாக, வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். அந்த வாலிபர், அப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண்ணும், தன் புகைப்படங்களை அனுப்பி உள்ளார். தொடர்ந்து, ஆபாச படங்களை அனுப்ப கூறியுள்ளார். அப்பெண் மறுக்கவே, 'சமூக வலைதளங்களில் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்' என, மிரட்டி வந்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் பயந்த அப்பெண், பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இது குறித்து, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தாவிடம் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்தனர். இதில், அந்த நபர் பயன்படுத்திய மொபைல் போன் எண், பெண் ஒருவருடையது என்பது தெரியவந்தது.
போலீசார் அதிர்ச்சி
அப்பெண்ணிடம் விசாரித்தனர். இதில், அவருடன் 'இன்ஸ்டா' வாயிலாக பழகிய நபர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு 'சிம் கார்டு' கிடைக்கவில்லை. இதனால், 'உங்கள் சிம் கார்டில் இருந்து 'வாட்ஸாப்' பயன்படுத்திக் கொள்கிறேன்' எனக் கேட்டு பெற்றதாக அப்பெண் தெரிவித்தார்.
தொடர் விசாரணையில், இன்ஸ்டா ஐ.டி., போலி என்பதும், மூன்று ஐ.டி.,க்கள் பயன்படுத்தி, பல பெண்களிடம் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த வாலிபர் போரூரில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு, 26, என்பதும், போரூரில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. ஆபாச படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட வாலிபர், டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, தன் போலி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, பெண்களை தன் வலையில் விழ வைத்துள்ளார்.
பின், பெண்களின் ஆபாச படங்களை அனுப்ப செய்து, அவர்களை மிரட்டி வந்தது தெரியவந்தது.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆனந்த் பாபுவை ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.