/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்
/
சுடு தண்ணீர் கொட்டியதில் குழந்தை காயம்
ADDED : ஜூலை 25, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை, நேபாளத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன், 32. இவர், அமைந்தகரை, கிழக்கு அரசமரம் தெருவில் தங்கி, கட்டடத்தொழிலாளியாக பணிபுரிகிறார்.
இவருக்கு, பத்மா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, வீட்டில் 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது சூடுதண்ணீர் கொட்டியதில், குழந்தையின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.