/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தம்பதி கண்முன் குழந்தை பலி திருமண நாளில் சோகம்
/
தம்பதி கண்முன் குழந்தை பலி திருமண நாளில் சோகம்
ADDED : ஜூன் 09, 2024 01:34 AM

மணலி:திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சேகர், 39; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மனைவி பூங்கோதை, 35, இவர்களது நான்கு வயது மகன் நிஷாந்த்.
நேற்று மாலை, சேகருக்கு திருமண நாள் என்பதால், குடும்பத்துடன் பைக்கில், மாதவரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு அருகே கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி பைக் விபத்துக்குள்ளானது.
இதில், பைக் நிலைதடுமாறி, கணவன் - மனைவி மற்றும் குழந்தை கீழே விழுந்து காயமடைந்தனர். அங்கிருந்த போக்குவரத்து போலீசார், மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை நிஷாந்த் உயிரிழந்தது தெரிய வந்தது. கணவன் - மனைவி பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுனரான, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஸ்ரீதர், 24, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.