/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர் பூங்கா கட்டணத்தை குறைக்க வேண்டும்: வானதி
/
சிறுவர் பூங்கா கட்டணத்தை குறைக்க வேண்டும்: வானதி
ADDED : ஆக 05, 2024 12:51 AM
சென்னை, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்த அறிக்கை:
சென்னை கிண்டியில் புதுப்பொலிவு பெற்ற சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த பூங்காவில், 5 - 12 வயதினருக்கு, 10 ரூபாய்; பெரியவர்களுக்கு, 60 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, ஏழை, நடுத்தர மக்களின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குக்கான செலவு அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் தனியாக பூங்காவுக்கு வரப்போவதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் வருவர் என்றால், அவருடன் பெற்றோர், உறவினர்கள் என, குறைந்தது இரண்டு - நான்கு பேர் வருவர்.
இதனால் குடும்பத்துக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. எனவே, பெரியவர்களுக்கு, 60 ரூபாய் நிர்ணயம் செய்திருப்பது நியாயமானதல்ல. அதை, 20 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.