/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர் மாநில சதுரங்கம் 510 பேர் உற்சாக பங்கேற்பு விளையாட்டு செய்திகள்

ADDED : ஆக 05, 2024 01:20 AM

சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவுடன், சென்னையில் உள்ள சீயோன் ஆல்வின் பள்ளிக் குழுமம் மற்றும் மவுண்ட் செஸ் அகாடமி இணைந்து, சிறுவர் - சிறுமியருக்கான ஒருநாள் மாநில செஸ் போட்டியை, நேற்று நடத்தின.
தாம்பரம் அடுத்த சேலையூர், இந்திரா நகர் ஆல்வின் பப்ளிக் பள்ளி அரங்கில் காலை 9:00 மணிக்கு போட்டிகள் துவங்கின.
இரு பாலருக்கும் தனித்தனியாக 8, 10, 12, 14, மற்றும் 18 ஆகிய வயது பிரிவின் கீழ், 'சுவிஸ்' முறையில் 'பிடே ராபிட் ரேட்டிங்' அடிப்படையில் போட்டிகள் நடந்தன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர் உட்பட பல மாவட்டங்களிலிருந்து 350 சிறுவர்களும், 160 சிறுமியரும் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகள் வீதம் நடந்த போட்டியில், இருபாலரிலும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 இடங்களைப் பிடித்த வீரர் - வீராங்கனையருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.